காரைக்குடியில் கன மழை

காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால், செக்காலை, கல்லுாரி சாலை, ரயில்வே ரோடு உட்பட பல இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் மின்தடையும் ஏற்பட்டது.
தேவகோட்டையில் நேற்று மதியம் 3:00 மணியளவில் தேவகோட்டை ராம்நகர் உட்பட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் தேவகோட்டை நகர் முழுவதும் பலத்த சத்தத்துடன் இடி மின்னலுடன் மழை கொட்டியது. வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மதியம் முதல் அடிக்கடி நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement