டூவீலர் மீது பஸ் மோதி பெண் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் காமராஜர் தெருவைச் சேர்ந்த செந்தில்நாதன் மகள் சினேகா23. இவர் நேற்று காலை 8:30 மணி அளவில் கண்டவராயன்பட்டியிலிருந்து டூ வீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) திருப்புத்துார் வந்தார்.

உடையநாதபுரம் விலக்கு ரோட்டிற்கு முன்னதாக வரும் போது எதிரே கண்டவராயன்பட்டிக்கு சென்ற அரசு பஸ் மோதியது. காயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். கண்டவரயான்பட்டி போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement