15 நாளாக குடிநீர் கட்: கிராம மக்கள் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வொன்றியத்தில் எஸ்.மாத்தூர் ஊராட்சி சொக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்ய மேல்நிலை தொட்டி உள்ளது. இத்தொட்டி மூலம் சொக்கலாம்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பழுதை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement