ஆண்டிபட்டியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் இருந்தனர்.
ரெங்கநாதபுரம் விலக்கு அருகே சந்தேகப்படும் வகையில் வந்த டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் டேப் சுற்றிய நான்கு பொட்டலங்களில் 8 கிலோ 940 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர்.
விசாரணையில் டூவீலரில் வந்தவர்கள் ஆண்டிபட்டி அருகே அய்யனார்புரத்தைச் சேர்ந்த அழகு 50, மற்றும் ஆந்திர மாநிலம் புரோடாடூர் நாகேந்திர நகரைச் சேர்ந்த கர்நாட்டி குருவிரெட்டி 43, என்பதும் விற்பனைக்காக கஞ்சா வாங்கி செல்வதும் தெரிய வந்தது. கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.2.70 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிவு!
-
ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!
-
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு
-
கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!
-
மசோதா விவகாரத்தில் கெடு விதித்த உச்சநீதிமன்றம்; 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
-
டில்லியில் புழுதிப்புயல்; திடீர் வானிலை மாற்றம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு