கட்டுமானப் பொறியாளர்கள் மனு

தேனி: தேனி மாவட்ட கட்டுமானப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மெல்வின், சையது பரூக் அப்துல்லா, ரவிபாரத் ஆகியோர் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் மனு அளித்தனர். அதில் 'எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை ஓராண்டில் மூன்றுமுறை உயர்ந்துள்ளது.

இதனால் பொறியாளர்கள், வீடு கட்டும் கட்டுமானங்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

உடன் உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினர் மோகன்ராம்,கூட்டமைப்பின் துணைத் தலைவர் செண்பகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபிரகாஷம், பிரதீப், கார்த்திகேயன், கண்ணன், தாழவாணன், முருகன்ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement