பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்

கூடலுார்: கூடலுாரில் இருந்து வெட்டுக்காடு, பளியன்குடி செல்லும் பாதையில் காஞ்சிமரத்துறை உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 96 பேர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாக கூறி பட்டா கேட்டு மனு செய்திருந்தனர். ஆனால் பல மாதங்களாகியும் பட்டா கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று பளியன்குடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொண்ட வருவாய் துறை அதிகாரிகள் முகாம் முடிந்து காஞ்சிமரத்துறை வழியாக வரும்போது மக்கள் முற்றுகையிட்டனர். ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினர் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement