மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 பேர் பணிநீக்கம்!

5

புதுடில்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000க்கும் அதிகமான பணியாளர்களை உடனடி பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.


செயற்கை நுண்ணறிவில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியுள்ளதால், பணிநீக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பேர் பணியாற்றுகின்றனர். எனினும், இந்தியாவில் உள்ள பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Advertisement