பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதால், அரசுக்கு கூடுதலாக 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ்' கணித்துள்ளது.
மத்திய அரசு, கடந்த ஏப்.,8ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு 2 ரூபாயும்; 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்துவதாக அறிவித்தது.
சந்தை விலைக்கு குறைவாக எல்.பி.ஜி., சிலிண்டர் விற்பனை செய்வதால், கடந்த 2024--25ம் நிதியாண்டில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 41,383 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருந்தன. இதனை ஈடு செய்வதற்காக கலால் வரியை உயர்த்தியதால், அரசுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் நஷ்டம், சிலிண்டர் ஒன்றுக்கு 220 ரூபாயில் இருந்து 170 ரூபாயாக குறைந்து உள்ளது.





மேலும்
-
ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிவு!
-
ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!
-
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு
-
கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!
-
மசோதா விவகாரத்தில் கெடு விதித்த உச்சநீதிமன்றம்; 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
-
டில்லியில் புழுதிப்புயல்; திடீர் வானிலை மாற்றம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு