சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை!

பெங்களூரு: சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையமான ஜாக்ஸா விஞ்ஞானிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான ஜாக்ஸாவுடன், சந்திரயான்-5 தொழில்நுட்பம் குறித்த கூட்டு முயற்சியின் நேற்று முன் தினம் தொடங்கி இரண்டு நாள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், திட்ட நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது:
சந்திரயான்-5/லூபெக்ஸ் மிஷனுக்காக ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவுடன் மூன்றாவது நேரடி தொழில்நுட்ப சந்திப்பை நடத்தினோம்.
இது 2040ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்கள் சந்திரனில் தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டது.
சந்திரயான்-5 மற்றும் லூபெக்ஸ் மிஷன் இந்தியாவின் சந்திர ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியா-ஜப்பான் விண்வெளி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.