மாளவிகா, உன்னதி ஏமாற்றம்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா, உன்னதி தோல்வியடைந்தனர்.
பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் மோதினர். மொத்தம் 44 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மாளவிகா 12-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 14-21, 11-21 என தாய்லாந்தின் சோச்சுவோங்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 9-21, 14-21 என தாய்லாந்தின் சுபனிதாவிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தருண் 14-21, 16-21 என டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 20-22, 14-21 என ஜப்பானின் ருய் ஹிரோகாமி, சயாகா ஹோபாரா ஜோடியிடம் வீழ்ந்தது.இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.