தேனியில் பா.ஜ., ஊர்வலம்

தேனி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்ரேஷன் சிந்துார் என பெயரிட்டு, வெற்றி கண்டது.

இந்த வெற்றியை கொண்டாடவும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தேனியில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நகராட்சி அலுவலகம் அருகே துவங்கி, நேருசிலை வழியாக பங்களாமேடு வரை நடந்தது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். நகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் பாண்டியன், வணிகர் சங்கங்களின் மாவட்ட தலைவர் செல்வகுமார், உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Advertisement