நிஹால் சரின் 2வது இடம்: ஆசிய செஸ் தொடரில்

அல் ஐன்: ஆசிய 'கான்டினென்டல்' செஸ் 9வது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் நிஹால் சரின் 2வது இடம் பிடித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் நடக்கிறது. இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின், ஈரானின் தனேஷ்வர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது, நிஹால் சரின் தொடர்ச்சியாக பெற்ற 4வது வெற்றியானது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் இனியன் (வெள்ளை), ஸ்ரீஹரி (கருப்பு) மோதினர். இதில் இனியன், 28வது நகர்த்தலில் வென்றார். இந்தியாவின் முரளி கார்த்திகேயன், பிரனவ் ஆனந்த் மோதிய மற்றொரு 9வது சுற்று போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் தனேஷ்வர் (ஈரான்) 7.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். நிஹால் சரின் (7.0 புள்ளி) 2வது இடத்தை கைப்பற்றினார். இனியனுக்கு (6.5) 5வது இடம் கிடைத்தது.
பெண்கள் பிரிவு 9வது சுற்றில் இந்தியாவின் வந்திதா அகர்வால், மேரி ஆன் கோம்ஸ், சவிதா ஸ்ரீ வெற்றி பெற்றனர். ரக் ஷிதா, பத்மினி ராத் மோதிய 9வது சுற்றுப் போட்டி 'டிரா' ஆனது. இந்தியாவின் வந்திதா (7.0 புள்ளி), ஸ்ரீஜா (6.5) முறையே 4, 5வது இடம் பிடித்தனர். சீனாவின் யுஜின் சாங் (7.0) முதலிடம் பிடித்தார்.
மேலும்
-
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு அனைத்தும் சேதம் அவதிக்குள்ளாகும் பயணிகள்
-
கருவேல மரங்கள் சூழ்ந்த கண்மாய் சேதமடைந்த மடை பராமரிக்கப்படுமா
-
ராட்டினம் உடைந்து இரு சிறுவர்கள் காயம்
-
கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டு சிறை
-
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
-
ஏர்வாடியில் சந்தன கூடு விழாவிற்காக கையால் சந்தனம் அரைப்பது தீவிரம்