சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு அனைத்தும் சேதம் அவதிக்குள்ளாகும் பயணிகள்

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் அனைத்து ரோடுகளும் சேதமடைந்துள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து சிவகங்கைக்கும் ஆண்டுக்கு 6.82 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4.02 கோடி வருவாய் கிடைக்கிறது.
தினமும் சிவகங்கையில் இருந்து பிற நகரங்களுக்கு ரயிலில் 2,000 பேர் வரை பயணிக்கின்றனர்.
குறிப்பாக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி செல்ல சிவகங்கை புதுார் ரோடு வழியாகவும், நகர்புற மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோடு வழியாக ரயில்வே ஸ்டேஷன் செல்கின்றனர். இவ்விரு ரோடுகளும் வாகனங்களில் பயணிக்கவே முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.
ரயில்வே ஸ்டேஷனை நிர்வாகம் சீரமைத்து, அதிக ரயில்களை விட்டபோதும், அதில் பயணிக்க நகரில் இருந்து வாகனங்களில் செல்லும் பயணிகளை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் விதமாக பல மாதங்களாக இவ்விரு ரோடுகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
சிவகங்கையில் ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும் என சர்வ கட்சியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் மக்கள் கோரிக்கை இது வரை ஏற்கப்படவில்லை.
தற்போது ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து கிடப்பதும் பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் புதுார் ரோடு, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டினை புதுப்பிக்க வேண்டும்.
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்