கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டு சிறை

ராமநாதபுரம்: தொண்டியில் இடபிரச்னையில் கொலை செய்ய முயன்ற வழக்கில் பார்த்திபன் என்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கல சுரேஷ் என்பவருடன் இடபிரச்னை காரணமாக 2020 ஏப்.,16ல் அவரை தாக்கி கொலை செய்ய முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜான் மகன்கள் பார்த்திபன், அசோக், சந்தியாகு மகன் பிரபு ஆகியோரை தொண்டி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இவ்வழக்கு விசாரணை நேற்று முன்தினம் முடிந்தது. பார்த்திபனுக்கு கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம், அவருடன் அசோக், பிரபு ஆகியோருக்கு தலா ரூ.2000 அபராதம் மட்டும் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி போலீசாரை எஸ்.பி., சந்தீஷ் பாராட்டினார்.

Advertisement