ரூ. 30.78 கோடி பரிசு * உலக டெஸ்ட் சாம்பியனுக்கு...

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ல் துவங்குகிறது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய மோத உள்ளன. கோப்பை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை, கடந்த சீசனை விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023ல் 13.70 கோடி பரிசு வழங்கப்பட்டது. இம்முறை ரூ. 30.78 கோடி வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடம் பெற்ற அணிகள் கடந்த இரு சீசனில் ரூ. 6.84 கோடி பெற்றன. இம்முறை பைனலில் தோற்கும் அணிக்கு ரூ. 18 கோடி தரப்பட உள்ளது.

Advertisement