பைக் பெட்டியை திறந்து நகை, ரூ.57,000 திருட்டு

தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, நெற்குணத்தை சேர்ந்த விவசாயி ராஜ்மோகன், 50. இவர், வீரகனுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 4 பவுன் நகையை அடமானம் வைத்திருந்தார்.


நேற்று மதியம், 2:00 மணிக்கு, அந்த நகையை மீட்டார். பின் வீரகனுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, 'சைன்' பைக்கில், அதன் பெட்டியில் வைத்துக்கொண்டார். அத்துடன், 57,000 ரூபாயை வைத்துள்ளார். பின் பைக் சாவியை எடுக்காமல், குளிர்பான கடைக்கு சென்றார். மீண்டும் வந்தபோது, பைக் பெட்டி திறந்து கிடந்தது. உள்ளே நகை, பணம் இல்லை. அவர் புகார்படி, வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement