10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
சேலம், சேலம், அம்மாபேட்டை அருகே குமரகிரி பைபாஸ் பகுதியில் நேற்று, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், அம்மாபேட்டையை சேர்ந்த விக்னேஷ், 30, என்பதும், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், 10.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி, சேலத்தில் விற்க முயன்றதும் தெரிந்தது. இதனால் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு
-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக காதர் மொய்தீன்
-
திருச்சியில் பேரணி திருமா அறிவிப்பு
-
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
-
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு
-
'அமித் ஷா அழைக்காதது வருத்தம் அளிக்கிறது' : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்
Advertisement
Advertisement