தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைவு

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணதங்கம் கிராம், 8,805 ரூபாய்க் கும், சவரன், 70,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 109 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 195 ரூபாய் குறைந்து, 8,610 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,560 ரூபாய் சரிவடைந்து, 68,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 108 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் தங் கம் சவரனுக்கு, 400 ரூபாய் குறைந்தது. இதையடுத்து, கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு, 1,960 ரூபாய் சரிவடைந்துள்ளது.

Advertisement