டயர் வெடித்து விபத்து உதவிய போலீஸ்காரர்

ஊத்துக்குளி; திருப்பூர் அருகே டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற போலீஸ்காரர் டிரைவரை மீட்டு, வாகனத்தை அப்புறப்படுத்தினார்.

ஈரோட்டில் இருந்து மரக்கட்டைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு சோமனுார் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை பாபு சாகுல் அமீர், 52 என்பவர் ஓட்டி சென்றார்.

சரக்கு வாகனம் பல்லகவுண்டம்பாளையம் - செங்கப்பள்ளி பைபாஸில் வந்த போது, திடீரென டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் ஏற்படாமல் தப்பினார். விபத்தில் ரோடு முழுவதும் கட்டைகள் சிதறி கிடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி, சரக்கு வாகனத்தில் இருந்த மரக்கட்டைகளை மக்கள் உதவியோடு விரைந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார்.

விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement