வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது எப்படி? அணைகளில் மாதிரி ஒத்திகை

உடுமலை : பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து, அமராவதி, திருமூர்த்தி அணைகளில், அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற மாதிரி ஒத்திகை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைப்பகுதியில், பருவமழை காலங்களில், அணை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்படும் பாதிப்புகளில், பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் வகையிலும், வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், மாதிரி ஒத்திகை நேற்று நடந்தது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், எஸ்.பி., யாதவ்கிறிஸ்அசோக், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் வருவாய்த்துறை, நீர் வளத்துறை, மின் வாரியம், தீயணைப்பு, காவல், மருத்துவம், நெடுஞ்சாலைத்துறை துறை அதிகாரிகள், 350 பேர் பங்கேற்றனர்.
இதில், மலைப்பகுதி மற்றும் நிலப்பகுதிகளில் கன மழை பெய்தால், பாதிப்பு ஏற்படும் பகுதிகள் குறித்து பட்டியல் தயாரித்து, பருவ மழைக்கு முன் அப்பகுதிகளில் முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
நிவாரண முகாம்கள் அமைத்தல், அதிகனமழையின் போது, அணை நிலவரத்தை முழுமையாக கண்காணித்து, நீர் திறப்பது, ஆறுகளில் நீர் திறக்கும் போது அபாய சங்கு ஒலித்தல் மற்றும் வழியோர மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வழிமுறைகள், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள், கால்நடைகளை மீட்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி சிகிச்சை, மேல் சிகிச்சை அளிப்பது, மின் விபத்துகளை தடுப்பது என, ஒத்திகை நடந்தது.
பாதிப்பு ஏற்படும் பகுதிகளை மூன்று நிலைகளாக பிரித்து, அப்பகுதிகளுக்கு எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும், தொடர்பு எண்களை மக்களுக்கு தெரியும் வகையில் வைப்பது என பல்வேறு செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியை முன்னிட்டு, அணைகளில் அபாய சங்கு ஒலித்தது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் இதர அரசு வாகனங்கள் அதிவேகத்தில் அப்பகுதியில் சென்றதால், வழியோர மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்