இந்தியாவின் பிரம்மோஸ்க்கு கூடியது மவுசு; வாங்க முண்டியடிக்கும் நாடுகள்!

புதுடில்லி: இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியது. இந்த ஏவுகணை, பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி சேதப்படுத்தியது.
இதனால் பிரம்மோஸ் ஏவுகணை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை காட்டிலும் விலை குறைவு என்பதால் இதை வாங்குவதற்கு பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
பிரம்மோஸ் ஏவுகணை என்பது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பு ஆகும். பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மஸ்க்வா நதிகளின் பெயர்களை இணைத்து, பிரம்மோஸ் என்று பெயரை இரு நாடுகளும் இணைந்து சூட்டின. இந்த ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
ஆர்வமுள்ள பிற நாடுகளின் பட்டியல்!
பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வரும் நாடுகள் பின்வருமாறு:
1.தாய்லாந்து
2. சிங்கப்பூர்
3. புருனே
4. எகிப்து
5. சவுதி அரேபியா
6. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
7. கத்தார்
8. ஓமன்
9. பிரேசில்
10. சிலி
11. அர்ஜென்டினா
12. வெனிசுலா
இந்த நாடுகள், குறிப்பாக கடலோர மற்றும் கடற்படை பாதுகாப்புத் துறைகளில், தங்கள் பாதுகாப்பு ஆயுதங்களை மேம்படுத்த பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளன.
சிறப்புகள் இதோ!
இந்த அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை 290 முதல் 400 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது. அதிகபட்சமாக 650 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதனை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்