மாநகராட்சி கட்டட பணி கமிஷனர் நேரில் ஆய்வு

தாம்பரம், தாம்பரம் சானடோரியத்தில், 43.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மாநகராட்சி கட்டட பணிகளை, கமிஷனர் பாலச்சந்தர் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கல்யாண் நகர், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

பீர்க்கன்காரணை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம், பெருங்களத்துார் தொடக்கப் பள்ளியில், 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகிய பணிகளையும், கமிஷனர் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

Advertisement