செங்கல்பட்டு மாணவி யோகாவில் உலக சாதனை

சென்னை, செங்கல்பட்டை சேர்ந்த, 7 வயது காராத்தே மாணவி தீக் ஷா, யோகா கலையில் உலக சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை பாரத் கல்லுாரி வளாகத்தில், ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சார்பில், அல்டிமேட் உலக சாதனையாளருக்கான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி, மே 11ம் தேதி நடந்தது. இந்தப் போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை திருச்சி, செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் அதிகமான கராத்தே மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் வித்யாஷரம் பள்ளி மாணவி எஸ். தீக் ஷிதா, தனிநபர் பிரிவில் பங்கேற்றார். சக்ராசனம் செய்து கொண்டே வயிற்றில் மீன் கிண்ணத்தை 4.30 நிமிடம் தொடர்ந்து சுமந்து உலக சாதனை செய்துள்ளார்.
சிறுமியின் சாதனைக்கு உதவியாக அவரது தந்தை சரவணன் இருந்தார். இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. சாதனைக்கு வயது தடை இல்லை என்று மாணவி தீக் ஷிதா நிரூபித்துள்ளார்.
மேலும்
-
மா.செ.,க்களுக்கு ராமதாஸ் அழைப்பு; என்ன நடக்குமோ என அன்புமணி தவிப்பு
-
மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம்
-
திண்டுக்கல் --- சபரிமலை அகல ரயில்பாதை சர்வே பணிக்கு ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு: தேனி எம்.பி., கோரிக்கைக்கு பலன்
-
தேனியில் பா.ஜ., ஊர்வலம்
-
பொறுப்பேற்பு
-
காட்டு யானையிடம் இருந்து தப்ப முயன்றவர் பலத்த காயம்