பிளஸ் 1 மாணவர் துாக்கில் தற்கொலை

திருப்பூர், ; திருப்பூரில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் துாக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனியைச் சேர்ந்த கண்ணன்- பிரியா தம்பதி, திருப்பூர் ராயபுரத்தில் வசிக்கின்றனர். பனியன் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அவர்கள் இளைய மகன் பாலகணேஷ், 16. மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறையில் தேனிக்குச் சென்ற பாலகணேஷ், நேற்று தான் திருப்பூர் திரும்பினார்.

இந்நிலையில் வேலைக்குச் சென்று விட்டு கண்ணன் வீடு வந்து பார்த்த போது, பாலகணேஷ் வீட்டினுள் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement