கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு

பரங்கிப்பேட்டை, : கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் அஸ்கர் அலிகான், 53; பா.ஜ., சிறுபான்மை பிரிவு கடலுார் மேற்கு மாவட்ட தலைவர்.

இவர், நேற்றிரவு 7:00 மணியளவில், வீட்டில் இருந்து அருகில் உள்ள இ - சேவை மையத்திற்கு பைக்கில் புறப்பட தயாரானார். அப்போது, அவரை மர்ம நபர்கள் 'ஏர்கன்' வாயிலாக சுட்டனர்.

அதில், அவர் காயமின்றி தப்பினார். பரங்கிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement