ரயில் பயணியிடம் நகை திருடிய ஆசாமி கைது
திருப்பூர், ;திருச்சியை சேர்ந்தவர் ரத்தின மோகன், 59. இவர் தன் பேத்தியின் பிறந்த நாள் விழாவுக்காக, தன் குடும்பத்துடன் கேரளா மாநிலம், கண்ணனுார் சென்றார். கடந்த, 12ம் தேதி மீண்டும் திருச்சி செல்ல கண்ணனுார் -- யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரசில் பயணித்தார்.
இதற்காக, திருப்பூரில் இறங்கி, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி செல்ல திட்டமிட்டு இறங்கி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார்.
அப்போது அவரிடம் இருந்த பையை யாரோ திருடி விட்டனர். அதில் அவர் 11.5 பவுன் எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பாபு மேற்பார்வையில், போத்தனுார் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ருவந்திகா தலைமையில் தனிப்படை போலீசார் இதில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நகையை திருடிய நாமக்கல்லை சேர்ந்த சின்னையன், 49, என்பவரை கைது செய்து, 11.5 பவுன் நகைகளை மீட்டனர்.
மேலும்
-
1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
-
போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
-
மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு
-
ரேஷன் அரிசி கடத்திய 2 விற்பனையாளர்கள் கைது
-
நெல் அறுவடை இயந்திரம் விற்று தருவதாக ரூ.21 லட்சம் மோசடி; விற்பனை ஏஜன்சி உரிமையாளர் கைது
-
கள்ளப்படகில் இலங்கைக்கு தப்பிச்சென்ற கள்ளகாதலன், காதலியுடன் 2 பேர் சிக்கினர்