போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

விருதுநகர் : பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மதியம் சிவகாசிக்கு புறப்பட்ட அரசு பஸ்சை (TN 67 N 1548) விருதுநகர் வடமலைக்குறிச்சி டிரைவர் அருள் மூர்த்தி ஓட்டினார். அந்தியூர் டோல்கேட் அருகே வந்த போது டிரைவர் மது போதையில் இருப்பதை அறிந்த பயணிகள் பஸ்சை நிறுத்தி போலீசுக்கு தெரிவித்தனர்.

அருள் மூர்த்தியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாற்று பஸ் ஏற்பாடு செய்து பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். போதையில் பஸ்சை ஓட்டிய அருள்மூர்த்தி, கண்டக்டர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைசாமி உத்தரவிட்டார்.

Advertisement