அவிநாசி வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் தேர்வு

அவிநாசி,; அவிநாசி வடக்கு ஒன்றிய பா.ஜ.,வுக்கு புதிய ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடந்தது.

வடக்கு ஒன்றிய புதிய தலைவராக நந்தினி லட்சுமிகாந்தன் தேர்வு செய்யப்பட்டார். கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர்கள் சண்முகம், முருகேசன், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஜெயபால், முன்னாள் ஒன்றிய தலைவர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கு, பா.ஜ., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement