ஏப்ரல் ஏற்றுமதி 9 சதவீதம் உயர்வு

புதுடில்லி:நாட்டின் சரக்கு ஏற்றுமதி, கடந்த மாதம் 9.03 சதவீதம் அதிகரித்து, 3.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வர்த்தக பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் இறக்குமதி 19.12 சதவீதம் உயர்ந்து, 5.52 லட்சம் கோடி ரூபாயாகவும்; வர்த்தக பற்றாக்குறை 2.25 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.

இதனிடையே, அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஏப்ரலில் 27 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 71,500 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement