ரூ.3.56 லட்சம் 'லஞ்சம்' பறிமுதல் டவுன் பஞ்., உதவியாளர் சிக்கினார்

சேலம், கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், செயல் அலுவலராக இருப்பவர், திருச்சியை சேர்ந்த பிரகந்த நாயகி. அங்கு உதவியாளராக, சேலம், வீராணத்தை சேர்ந்த ஆறுமுகம், 30, பணியாற்றினார். இவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சில நாட்களாக கண்காணித்தனர்.


நேற்று மாலை, சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தணிக்கை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார், பிடித்து விசாரித்தனர்.
அப்போது, செயல் அலுவலருக்காக, 3.56 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை மாநகராட்சி பின்பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறினார். இதனால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement