தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
சேலம், சேலம், முகமது புறா பகுதியை சேர்ந்தவர் இம்ரான், 34. அஸ்தம்பட்டி, அய்யனார் தோட்டத்தை சேர்ந்தவர் முஸ்தபா, 30.
இருவரும் சேர்ந்து கடந்த ஏப்., 18ல், கிச்சிப்பாளையம், நாராயண நகரில் வசிக்கும் தம்பதி வீட்டில் நுழைந்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் நகைகள், 2 மொபைல் போன்களை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரில், கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, இம்ரான், முஸ்தபாவை கைது செய்தனர்.
இம்ரான், முஸ்தபா ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். முஸ்தபா மீது, ஏற்கனவே, 4 முறை குண்டாஸ் பாய்ந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement