சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு

சேலம் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவரை, அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:

பன்னா லால், 1995ல் ரயில்வே பொறியாளர் பிரிவில் சேர்ந்தவர். தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா பிரிவில் உள்ள பீமாவரத்தில் உதவி பொறியாளராகவும், பின் ஓங்கோலில் உதவி கோட்ட பொறியாளராகவும், தெற்கு மத்திய ரயில்வேயில் நிர்வாக பொறியாளராகவும் பணியாற்றினார். தொடர்ந்து கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு திட்டங்களில் துணை தலைமை பொறியாளராகவும், வடகிழக்கு ரயில்வேயின் வாரணாசி பிரிவில் மூத்த கோட்ட பொறியாளராகவும், வடகிழக்கு ரயில்வேயில் துணை தலைமை பொறியாளராகவும் பணியாற்றினார். தவிர சிங்கப்பூர், மலேசியாவில் வெளிநாட்டு பயிற்சி பெற்றுள்ளார். மேலும் பொதுமேலாளர் மட்டத்தில் அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement