சக்தி விநாயகருக்கு மாவிளக்கு ஊர்வலம்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி அழகிரி நகரிலுள்ள வைரியம்மன், மாரியம்மன், காளியம்மன் ஆகிய முப்பெரும் தேவியரின் சித்திரை தேர்திருவிழா கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த, 13ல் வைரியம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் பூக்கூடை சக்தி அழைத்தல், கரகாட்டம், காவடி ஆட்டம், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் பக்தர்கள் பிள்ளை வரம் வேண்டியும், குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தி பெயர் சூட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, சக்தி விநாயகருக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பின், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

Advertisement