ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோடை விடுமுறையில் ஒகேனக்கல்லுக்கு அதிகரித்த நீர்வரத்தால், அங்குள்ள வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்
-
'இந்தியா - பாக்., உறவு இருதரப்பு ரீதியிலானது மட்டுமே'
-
வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது எப்படி? அணைகளில் மாதிரி ஒத்திகை
-
சூலுார் விமானப்படைத் தளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
-
இந்தியாவின் பிரம்மோஸ்க்கு கூடியது மவுசு; வாங்க முண்டியடிக்கும் நாடுகள்!
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
-
அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்