தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்


கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ஆணையத் தலைவர் அருண் சேச தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் அப்துல்குத்தூஸ், உறுப்பினர்கள் ஹாமில்டன் வில்சன், ஸ்வர்னராஜ், நாகூர் ஏ.எச்.நஜ்முதீன், பிரவின்குமார் தாட்வியா, ராஜேந்திர பிரசாத், எம்.ரமீட் கபூர், முகம்மது ரபி, வசந்த் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
கூட்டத்தில் ஆணைய தலைவர் அருண் சேச பேசுகையில்,''இதுவரை, 18 மாவட்டங்களில், 689 மனுக்கள் பெற்று, 532 மனுக்கள் மீதான தீர்வை அந்தந்த மாவட்டங்களில் நடந்த கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு காணப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கூட்டத்திலும், 80 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தொடர்ந்து அவர், 59 பேருக்கு, 6.28 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி மற்றும் பர்கூர் வட்டம், நாகம்பட்டி கிராமத்தில் தேவாலயம் நடத்த தடையின்மை சான்றிதழை வழங்கினார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement