கல்லுாரி அறிவிப்புக்கு முன் திட்டமிடல் வேண்டும்; விவசாயிகள் நலச்சங்கம்
கரூர், காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் மகாதானபுரம் ராஜாராம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 2022ம் ஆண்டு அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லுாரி தொடங்கப்பட்டது. அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள, சமுதாய கூடத்தில் தற்காலிகமாக நடக்கிறது. கரூர் வேளாண் கல்லுாரியும், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இது போன்ற அறிவிப்புகளை அரசு அறிவித்து சரியான இடம், கட்டடம், அலுவலர் பற்றாக்குறை போன்ற வசதியில்லாமல், பல மாவட்ட
ங்களில் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில், 35 மருத்துவக் கல்லுாரிகளில் குறைந்த வருகை பதிவு, பேராசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதில், கரூர் மருத்துவக் கல்லுாரி இருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இனியாவது, வேளாண், கலை கல்லுாரிகளை அரசு அறிவிக்கும் முன், சரியான இடம், கட்டட வசதியை திட்டமிட்ட பின் அறிவித்தால், மாணவர்களில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.