சித்தராமையாவுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம்

கோலார்: கோலார் புறநகரின் டமக்காவில் உள்ள ஜாலப்பா வெள்ளி விழா மண்டபத்தில், தேவராஜ் அர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையாவின் சமூக சேவையை கருதி, அவருக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்குவதாக துணை வேந்தர் நாகராஜ் அறிவித்தார்.
இது குறித்து, அவர் பேசியதாவது:
முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, கல்வி நிறுவன நிர்வாக வாரியத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. சித்தராமையா இரண்டு முறை முதல்வரானவர்; 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர். அனைத்து சமுதாயத்தினருக்கும், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி, புதிய சகாப்தம் படைத்துள்ளார்.
இதற்கு முன் எந்த அரசுகளும், இது போன்ற பணிகளை செய்தது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே, சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்திருக்க வேண்டும். இப்போது அதற்கான முடிவை எடுத்தோம்.
டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் கூறவில்லை. கோலாருக்கு அவர் வரும் போது, டாக்டர் பட்டம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு