5 ஆண்டுகளுக்கு பின் திருவிழா மக்கள் உற்சாக கொண்டாட்டம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, முதலைப்பட்டியில் அய்யனார், செல்லாயி அம்மன், பிடாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, 13 இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் தேர் மேளதாளங்கள் முழங்க முதலைப்பட்டி, கீழமேடு காவல் நகர், பொறைக்கிலான் கவுண்டம்பட்டி, திருமுடி தோட்டம், வீரமலை கவுண்டம்பட்டி, பாளையத்தான தோட்டம், மேலமேடு உள்ளிட்ட எட்டு ஊர்களை சுற்றி ஊர்வலம் வந்தனர்.


வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமிகளுக்கு தேங்காய், பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால் ஊர் மக்களும், இளைஞர்களும் மேளதாளங்கள் மூலமாக உற்சாகமாக ஆடி வலம் வந்தனர். ஆங்காங்கே பக்தர்கள் சார்பில் நீர்மோர், பானகம், சர்பத், அன்னதானம் வழங்கினர்.

Advertisement