பைக்கிலிருந்து விழுந்தவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி;மற்றொருவர் காயம்
கரூர், முன்னாள் சென்ற சரக்கு வாகனம் மீது, பைக் மோதி தவறி விழுந்த இருவரில் ஒருவர் கார் மோதி இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 20. திருப்பூரில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது உறவினர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் மதன்தாஸ், 17. இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் இருந்து, திருப்பூருக்கு பைக்கில் சென்றனர். சந்தோஷ்குமார் பைக்கை ஓட்ட, பின்னால் மதன்தாஸ் அமர்ந்திருந்தார்.
நேற்று முன்தினம் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், வெங்ககல்பட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகன டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதில் தடுமாறிய பைக், டாடா ஏஸ் மீது மோதியதில், இரண்டு பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் விழுந்து கிடந்த, இவர்கள் மீது அந்த வழியே சென்ற கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதன்தாஸ் பலியானார். காயமடைந்த சந்தோஷ்குமார், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் சிலை கடத்த முயன்று சிக்கினர்
-
பள்ளி தாளாளருக்கு '23' தமிழ் ஆசிரியருக்கு '43'
-
'டிமிக்கி' தரும் கவுன்சிலர்கள்; கட்டிக்காக்கும் கமிஷனர்கள்
-
1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
-
போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
-
மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு