பள்ளி தாளாளருக்கு '23' தமிழ் ஆசிரியருக்கு '43'

3

கரூர் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஆலம்பாடியை சேர்ந்தவர் யுவராஜ், 41; கரூர் மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர். திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த நிலவொளி, 42; அப்பள்ளி தமிழ் ஆசிரியர். கடந்த 2022ல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு, இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

மாணவியின் பெற்றோர், லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். யுவராஜ், நிலவொளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி தங்கவேல், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார்,

நிலவொளிக்கு, 43 ஆண்டு; யுவராஜுக்கு, 23 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் தலா, 1,000 ரூபாய்- அபராதமும் விதிக்கப்பட்டது. சிறுமிக்கு, 7 லட்சம் ரூபாய்- நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement