'டிமிக்கி' தரும் கவுன்சிலர்கள்; கட்டிக்காக்கும் கமிஷனர்கள்

விருதுநகர் : தமிழக உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி, மூன்று முறை நகராட்சி கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.

ஆனால், அவ்வாறு வராதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி கமிஷனர்கள் பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் நகராட்சியில், தி.மு.க., பெண் கவுன்சிலர் ஒருவர் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் சமாளித்தனர்.

இவர் ஆளுங்கட்சி என்பதால், அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக பிற கட்சியினர் புகார் கூறினர்.

இதேபோன்று தான் தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளிலும், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராதபட்சத்திலும், போலி கையெழுத்திட்டோ, வேறு நாட்களில் கையெழுத்திட்டோ சமாளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement