திருச்சியில் பேரணி திருமா அறிவிப்பு

திருச்சி : திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:

பா.ஜ., அரசு மதச்சார்பின்மையை சிதைக்கும் வகையில், ஒட்டுமொத்தமாக அரசமைப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

வக்ப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துவதோடு, 'மதச்சார்பின்மையை காப்போம்' என, அறைகூவல் விடுக்கும் வகையில், திருச்சியில், மே, 31ம் தேதி, பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement