ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு நாள்

புதுச்சேரி: மறைந்த புதுச்சேரி ஐ.என்.டி.யூ.சி., தலைவர் ரவிச்சந்திரன் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை முதலியார் பேட்டை , உழந்தை கீரப்பாளையத்தில் உள்ள சக்திவேல் பரமானந்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாநில ஐ.என்.டி.யூ.சி., தலைமை அலுவலகத்தில் நடந்த நினைவு அஞ்சலி அனுசரிப்பு நிகழ்ச்சியில், ரவிச்சந்திரன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதிதாசன் மகளிர் கல்லுாரி எதிரில் நீர் மோர் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. 11:30 மணிக்கு உழவர்கரை நகராட்சி அலுவலகம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டசபை காங்., தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், நேரு எம்.எல்.ஏ., காங்., நிர்வாகிகள் சங்கர், ராஜாராம், தனுசு, குமரன், உதயகுமார், சத்யா , ஜெரால்ட், செந்தில், மாநில ஐ.என்.டி.யூ.சி., நிர்வாகிகள் சொக்கலிங்கம், மலர்மன்னன் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.

Advertisement