பாகூரில் மா.கம்யூ., திறந்த வெளி கருத்தரங்கம்

பாகூர்:மா.கம்யூ., பாகூர் கொம்யூன் குழு சார்பில், 'நீர் எங்கள் உரிமை மற்றும் வாழ்வாதாரம்' என்ற தலைப்பிலான 'திறந்தவெளி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

பாகூர் சிவன் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பாகூர் நகர தெற்கு கிளை செயலாளர் முருகையன் வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் கலியன் முன்னிலை வகித்தார்.

நீரியல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர்.

இதில், பாகூர் முதல் கரையாம்புத்துார் வரை தென்பெண்ணை ஆற்றில் 40 போர்வெல் மூலமாக குடிநீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்தி, மழைநீர் சேகரிப்பு, கடல் நீரை குடிநீர் ஆக்குவது போன்ற மாற்று திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன்., மாநில குழு உறுப்பினர் இளவரசி, அன்புமணி, ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement