இந்திய ராணுவத்தை பாராட்டி பா.ஜ., தேசியக்கொடி ஊர்வலம்

புதுச்சேரி: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரி பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது.

பழைய பஸ் நிலையம் அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அசோக்பாபு, நிர்வாகிகள் வெற்றிச்செல்வம், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் அண்ணா சாலை வழியாக சென்று அஜந்தா சிக்னல் அருகே முடிவடைந்தது.

பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பொதுமக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் செயலை கண்டிக்கும் விதமாக பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்துார் திட்டத்தை ஆரம்பித்து, தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அடியோடு அழித்துள்ளார். இந்த மகத்தான பணியை இந்திய ராணுவ வீரர்கள் மிகச்சிறப்பான செய்து முடித்தனர்.

பிரதமர் எந்த நாட்டின் மிரட்டலுக்கும் அடி பணிபவர் இல்லை. இரு தினங்களுக்கு முன் பிரதமர் பஞ்சாப் விமான படை தளத்துக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதில், எந்தவித தாக்குதலுக்கும், அணு ஆயுதங்களுக்கும் அஞ்சமாட்டோம். தாக்குதலை எதிர்கொள்ளவும், பதிலடி கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

புதுச்சேரி ராணுவ வீரர்களுக்கான அனைத்து சலுகைகளும் துறையின் மூலம் வழங்கப்படுகிறது. துணை ராணுவத்தினருக்கும் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

'லேட்'டாக வந்த அமைச்சர்



பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரி பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலம் அஜந்தா சிக்னலில் முடிவடைந்த நிலையில், கடைசி நேரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் வேக வேகமாக வந்து பங்கேற்றார்.

Advertisement