சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

சிவகாசி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் குருசாமி மகன் கார்த்திக் 25.

இவர் இரு ஆண்டுகளுக்கு முன் தென்காசி மாவட்டம் வீரசிகாமணியில் தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது சிவகாசியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் அறிமுகமாகி, இருவரும் காதலித்து வந்தனர்.

மார்ச் 3ல் சிறுமியை திருமணம் செய்த கார்த்திக், சிவகாசியில் சிறுமியின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுமி 2 மாத கர்ப்பமானார். இதுகுறித்து மகளிர் நல அலுவலர் புகாரில் சிவகாசி மகளிர் போலீசார் கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement