போலீஸ் செய்திகள்...

மூன்று விபத்தில் நான்கு பேர் பலி
கொட்டாம்பட்டி: பாண்டிச்சேரி சசிகுமார் 45, மதுரைக்கு சுவாமி கும்பிடுவதற்காக மனைவி, மூன்று குழந்தைகளுடன் காரில் சென்றார். கொட்டாம்பட்டி, சூரப்பட்டி அருகே கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணித்த சசிகுமார், அவரது மகள் அஸ்விகா 8, ஆகியோர் இறந்தனர். மற்றவர்கள் மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கிறார்.
மேலுார்: வாச்சாம்பட்டி அய்யனார் 35, சிங்கப்பூரில் கட்டட வேலை பார்த்தார். ஒரு மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு திரும்பினார். இவருக்கு யோக சுந்தரி 27, என்ற மனைவியும் நிதிஸ்ரீ 4, வயோசிகா 2 , என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அய்யனார் நேற்று மாலை கிடாரிபட்டியில் உள்ள உறவினரை பார்க்க டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. எதிரே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் திடீரென திரும்பியதால் டூவீலர் மீது மோதியது. இதில் அய்யனார் இறந்தார். எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.
மதுரை: ஆரப்பாளையம் சோனை கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் லோடுமேன் கணேசன் 46. இவர் மே 4ல் திருமங்கலம் கரடிக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) வந்துள்ளார். அதிகாலை 4:00 மணிக்கு கரடிக்கல் அருகே வந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு நேற்று பலியானார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
பேரையூர் பால்பாண்டி 24. செல்ல முனியாண்டி 25. விருதுநகர் மாவட்டம் குல்லுார்சந்தை சூரன் 22. மூவரும் பேரையூர் மம்மலை அடிவாரத்தில் கஞ்சா விற்றனர். ரோந்து சென்ற எஸ்.ஐ சந்தோஷ்குமார் , மூவரையும் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்