அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

பேரையூர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஈஸ்வரன் 43. இவருக்கு கள்ளிக்குடி தாலுகா மறவபட்டி-காசிபுரம் ரோட்டில் விவசாய நிலம் உள்ளது. இதில் அனுமதி இன்றி வெடி பொருட்கள் தயாரித்து வந்தனர்.

மறவபட்டி வி.ஏ.ஓ சோனைக்கு கிடைத்த தகவலில் அவர் வில்லுார் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அங்குசென்று சோதனை செய்தபோது பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர்.

ஈஸ்வரன், விருதுநகர் மாவட்டம் அம்மன்கோவில்பட்டி புதுார் மாரிச்செல்வம் 25, ஆகிய இருவரை கைது செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement