பா.ஜ., மூவர்ணக்கொடி ஊர்வலம்

திண்டுக்கல்: ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை மூலம் தீவிரவாத செயல்களை ஒழித்த முப்படை வீரர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாராட்டு தெரிவித்து திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மூவர்ண கொடி ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மதுரை பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பங்கேற்றார். தபால் நிலையத்தில் தொடங்கி மணிக்கூண்டு அருகே நிறைவு பெற்றது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சாமி, ஒன்றிய துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் கண்ணன், கார்த்திகை சாமி, செந்தில் மாயதேவர் பங்கேற்றனர்.

Advertisement