போலீஸ் செய்தி ....

மனைவி மாயம் கணவர் புகார்

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் புதுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 30, இவரது மனைவி ராதாமணி 20, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. மே 12 ல் ராதாமணி ஆதார் கார்டு பதிய வருஷநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது தானும் உடன் வருவதாக கருப்பசாமி தெரிவித்துள்ளார். வீட்டில் பார்த்த போது மனைவியை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லூரி மாணவர் மாயம்

கடமலைக்குண்டு: - வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் - மலர்க்கொடி, இவர்களது மகன் சுசீத்குமார் 19, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். மே 12 ல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தாய் மலர்கொடி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement